TRB Direct Recruitment of Lecturers /அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பணிவாய்ப்பு விண்ணப்பிக்க ரெடியாகுங்க


        பாலிடெக்னிக் கல்லுரிகளில் விரிவுரையாளர்கள் பணி நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பாலி டெக்னிக கல்லுரிகளில் நேரடியாக நியமிக்க விரிவுரையாளர் பணியாளர்களுக்கான 1058 போஸ்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவுரையாளர் ஆசிரிய தேர்வுவாரியம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது . 28 ஜூலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . 28 ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . செபடம்பர் 16 ஆம் நாள் தேர்வு நடைபெறுகிறது.             அரசு பாலிடெக்னிக்களில் நியமிக்கப்படும் விரிவுரையாளர்களுக்கான சம்பளம் ரூபாய் 15,600-39,100 கிரேடு பே தொகை ரூபாய் 5200 மற்றும் அலவன்ஸ் பே பேண்ட் III அதன் கீழ் வழங்கப்படும் . ஆசிரியத் தேர்வு பணிக்காலம் 57 வயது வரையாகும் . படிப்பு தகுதி இன்ஜினியரிங் படிப்பு எலக்டிரானிக், ஆர்கிடெக்ஸர் , மற்றும் இன்ஜினியரிங் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும் . இன்ஜினியரிங் படிக்காதவர்கள் எம் ஏ ஆங்கிலம், எம்எஸ்சி, மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்டரி போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் 60% மதிபெண் பெற்றிருக்க வேண்டும் . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்,டி போன்றோர்கள் ரூபாய் 300 செலுத்த வேண்டும் . பொதுபிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் போன்றோர் விண்ணப்பிக்க ரூபாய் 600 செலுத்த வேண்டும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் . தேர்வு முறையானது எழுத்துதேர்வு ஒரே பேப்பர் 150 கேள்விகள் கொண்டிருக்கும் . 100 கேள்விகள் மெயின் சப்ஜெக்டிலிருந்து கேட்கப்படும் ஒவ்வோரு கேள்வியும் 1 மதிபெண் பெறும் மற்றும் 40 கேள்விகள் மெயின் சப்ஜெக்டிலிருந்து கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிபெண்கள் கொண்டன . அடுத்து பொது அறிவு பாடத்திலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிபெண் வழங்கப்படும் . மொத்தம் 190 மதிபெண்கள் வழங்கபடும் . விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர்கள் தேர்வு எழுத்து தேர்வு மட்டும் ஆகும் . சான்றிதழ் மதிப்பீடு ஆசரியர் அனுபவம் முழுநேர அரசு மற்றும் தனியார் கல்லுரிகளில் வேலைப்பார்த்திருந்தால் 2 மதிபெண் வழங்கப்படும் . பகுதி நேர அரசு மற்றும் தனியார் கல்லுரிகள், அரசு உதவிபெறும் கல்லுரிகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பின் 2 மதிபெண் வழங்கப்படும் . அத்துடன் எம்இ, எம் டெக் படித்திருந்தால் 3 மதிபெண் வழங்கப்படும் . பிஹெச் டி படித்திருந்தால் 5 மதிபெண் வழங்கப்படும் https://trbonlineexams.in/polytechnic/ என்ற இணையத்தளமூலம் அனைத்து தகவல்களும் அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

TRB Direct Recruitment of Special Teachers /சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்